பொங்கல் பண்டிகை உற்சாகம் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

பொங்கல் பண்டிகை உற்சாகம் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் மகர சங்கராந்தி, பொங்கல், போகி, உத்தராயணம் நல்வாழ்த்துக்கள். இந்த அறுவடைப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” என கூறியுள்ளார்

பொங்கல் பண்டிகைக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வாழ்த்து செய்தியில், “இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பல அறுவடை விழாக்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். மகர சங்கராந்தி, பொங்கல், சுக்கி ஹப்பா, மாகி, போகலி பிஹு, கிச்சடி, பவுஷ் பர்வா, உத்தராயணம் மற்றும் மகரவிளக்கு ஆகிய பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழுமையையும் கொண்டு வரட்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in