'இதுதானா மோடி மேஜிக்?' குழந்தைகளோடு குழந்தையாகும் மோடி வீடியோ வைரல்!

குழந்தைகளிடம் மோடியின் மேஜிக்
குழந்தைகளிடம் மோடியின் மேஜிக்

பிரதமர் மோடி குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடி மகிழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாஜக சார்பில் இன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ’குழந்தைகளோடு குழந்தையாகும் மோடி’ என்ற தலைப்பிலான இந்த வீடியோ, எப்போது எடுக்கப்பட்டது, அந்த வீடியோவில் இருக்கும் குழந்தைகள் யார்... என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்தப் பதிவில் இல்லை. ஆனால் குழந்தைகள் தினத்தன்று தான் சந்தித்த 2 குழந்தைகளுடன் மோடி விளையாடியதாக குறிப்பிட்டு சிலர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் நாணயம் ஒன்றை வைத்துக்கொண்டு மோடி மேஜிக் வித்தை செய்து காட்டுகிறார். தன் நெற்றியில் நாணயத்தை வைத்து, பின்தலையில் தட்டிய பிறகே அதனை விழச் செய்கிறார். ஆனால் அந்த நாணயம் குழந்தைகளின் மத்தியில் அதே வித்தைக்கு செல்லுபடியாகவில்லை. இந்த மேஜிக் நிகழ்வின்போது மோடி ஒரு குழந்தையைப் போன்றே உற்சாகம் காட்டுகிறார்.

’பிரதமர் மோடியின் உள்ளிருக்கும் குழந்தையை அடையாளம் கண்டுகொண்டோம்’ என இந்த வீடியோவை பகிருவோர் சிலாகிக்கின்றனர். பிரதமர் மோடியின் மிகவும் அரிதான முகம் என்றும் சிலர் புகழ்ந்து வருகின்றனர். ’அரசியல் களத்தில் பிரபலமான மோடி மேஜிக் இதுதானா?’ என வீடியோவை பகிர்ந்து பலரும் பதிவிட்டுள்ளனர். ஆனால் வழக்கம்போல இந்த வீடியோவை முன்வைத்து பிரதமர் மோடி பகடிக்கும் ஆளாகி உள்ளார்.

குழந்தைகளிடம் மோடியின் மேஜிக்
குழந்தைகளிடம் மோடியின் மேஜிக்

’டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை மேஜிக் மூலம் தடுக்க முயலும் மோடி’ என்பது அவற்றில் ஒன்று. இன்னும் சிலர் ’மோடியின் விளையாட்டை குழந்தைகள் ரசிக்கவில்லை, சிறுவன் பாதியில் அழுகையுடன் விலகுகிறான்’ என்றெல்லாம் வீடியோவை கூராய்வு செய்து சாடியும் வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!

இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!

'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!

உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்

மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in