
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபெனின் உடல் நிலை சீராக இருப்பதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள யு. என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டரின் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
அம்மாவுடனான பந்தத்தைப் பற்றி பெருமிதத்துடன் அடிக்கடி பேசும் பிரதமர் மோடி, சமீபத்தில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரை நேரில் சந்தித்தார்.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று கார் விபத்தில் காயமடைந்தார். இந்த நிலையில் ஹீராபென் மோடியும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வந்துள்ளது.
பஇ