கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், தர்வாங்கா மாவட்டத்தில் லலித் நாராயண் மிலிதா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துடன் 3 கல்லூரிகள் இணைந்து செயல்படுகிறது. இந்நிலையில், 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிட்டது பல்கலைக்கழகம். அதில், சில மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதனால், பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. உடனடியாக பிரதமர், தோனியின் படத்தை நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், "மாணவர்கள் தங்களது புகைப்படங்களையும் தரவுகளையும் பதிவேற்றம் செய்தால் அனுமதி சீட்டு வழக்கப்படும். ஆனால் சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர், தோனியின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறினார்.