தாயாரின் உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்தார் பிரதமர் மோடி: குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தாயாரின் உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு செய்தார் பிரதமர் மோடி: குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள வீட்டில், தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் மோடி.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மோடி, பின்னர் தாயாரின் காலை தொட்டு வணங்கினார். இதன் பின்னர் தனது தாயார் உடலை தனது சகோதருடன் சேர்ந்து சுமந்து சென்றார். அதன் பின்னர் அங்கு தாயாராக வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் தாயார் உடல் வைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் மோடியும் பயணம் செய்தார். இதையடுத்து, தாயாரின் உடல் உடனடியாக இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் மோடியின் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் தாயாரின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று குஜராத் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்மோடி கடவுளின் தாமரை பாதங்களை அடைந்தார். தேசம் உங்கள் இழப்பையும் துயரத்தையும் எங்கள் சொந்த குடும்பமாக பகிர்ந்து கொள்ள நிற்கிறது. பிரிந்த ஆன்மாவுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்வோம், இழப்பைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கவும், தேசத்திற்கு அயராத சேவையைத் தொடரவும் இறைவனை வேண்டுகிறோம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in