தாய் இறந்த சோகத்தில் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

பிளஸ் 2 மாணவி தற்கொலை
பிளஸ் 2 மாணவி தற்கொலைதாய் இறந்த சோகத்தில் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

தாய் இறந்த சோகம் தாங்க முடியாமல் தொடர் வேதனையில் இருந்த பிளஸ் 2 மாணவி வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவருக்கும், தெரிசனங்கோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். சுதாவுக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது. இதனிடையில் அவர் உடல்நலமின்மையால் இரு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்தார். அவரது கணவர் பாஸ்கர் அதன் பின்பு தன் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளாமல் விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் சுதாவின் இருபிள்ளைகளையும் தாய் மாமா சுரேஷ் என்பவர் வளர்த்து வந்தார். இதில் சுதாவின் மூத்த மகள் அஸ்மிதா(17) பிளஸ் 2 படித்து வந்தார். தாய் இறந்தது முதலே மனவேதனையில் இருந்த அஸ்மிதா, அதனால் குடும்பப் பொறுப்பை ஏற்க மனமின்றி தந்தையும் பிரிந்து சென்றுவிட்டதை நினைத்து புலம்பியவாறே இருந்தார். தன் தாயின் மரணத்திற்குப் பின்பு, இப்படியான குடும்பச் சிக்கலால் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே இருந்துவந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளை மொத்தமாகச் சாப்பிட்டார். இதில் மயங்கிக் கிடந்தவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சைக்குச் சேர்த்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு அஸ்மிதா உயிர் இழந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த நிலையில், தந்தையும் விட்டுச் சென்றதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in