பிளஸ் 2 மாணவி கழுத்தை அறுத்துக்கொலை: வாலிபரின் ஆயுள்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 மாணவி கழுத்தை அறுத்துக்கொலை: வாலிபரின் ஆயுள்தண்டனையை உறுதி  செய்தது உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர், தெரிந்தவர்கள் என்பதால் 2014 மார்ச் 16-ம் தேதி, மாணவியின் வீட்டுக்கு ஜெயராமன் சென்றுள்ளார். அந்த மாணவியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால், படிப்பு முடிந்த பின்பு அதுகுறித்து பேசிக்கொள்ளலாம் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், மாணவியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். இதனால் ஜெயராமன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தன்னுடைய ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயராமன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, உடனடியாக திருமணம் செய்து வைக்காததால் மாணவியும்,ஜெயராமனும் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஜெயராமன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், மாணவியின் உடலில் இருந்த 32 காயங்களைச் சுட்டிக்காட்டி, இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆயுள் தண்டனையை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, ஜெயராமனின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in