பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்!

பலாத்காரம் செய்து மாணவி கொலை
பலாத்காரம் செய்து மாணவி கொலைபிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்!

ராஜஸ்தானில் பிளஸ் 2 மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு சாலை விபத்தில் அவர் இறந்தது போல நாடகமாட முயன்ற 3 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள லட்சுமண்கர் பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 2 மாணவி. இவர் தாத்தாவுடன் தங்கி பள்ளியில் படித்து வந்தார். இவரது தந்தை அரேபியாவில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பிளஸ் 2 மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனால், அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து மாணவியை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அத்துடன் மாணவி சாலை விபத்தில் காயமடைந்ததாவும், தாங்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்யக் கோரி மாணவியின் குடும்பத்தினரும், கிராம மக்களும் லட்சுமண்கர் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுமியின் உடலை போலீஸில் ஒப்படைக்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். டிஎஸ்பி ஷ்ரவன் குமார் ஜோர்ஹாட், மாணவியின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றார் ஆனால் பலனில்லாமல் போனது.

குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்பு இருப்பதால், காவல் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இரவு 10 மணி வரை போராட்டம் நடைபெற்றது.

" மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவரது உறவினரின் நண்பர் மற்றும் 3 சிறுவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியின் தந்தை வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு இன்று (மே 13) பிரேத பரிசோதனை நடக்கும். அத்துடன் குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எஸ்.ஐ மோகன் சிங் கூறினார். இந்த சம்பவம் காரணமாக லட்சுண்கர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in