செல்போன் வாங்கித் தராததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை

செல்போன் வாங்கித் தராததால் பிளஸ்  2 மாணவர் தற்கொலை

செல்போன் வாங்கித் தராததால் பிளஸ் 2 மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் புளியங்குடியில் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகில் உள்ள டி.என்.புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஸ்(17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துவந்தார். தன் அப்பாவின் டீக்கடைக்குள் இன்று நுழைந்த சதீஷ் வெகுநேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. கருப்பசாமி கடைக்குள் சென்று பார்த்த போது, சதீஸ் அங்கு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், “சதீஸ் கடந்த சில தினங்களாகவே தனக்கு பள்ளிக்கூடத்திற்குச் செல்ல விருப்பம் இல்லை எனக் கூறிவந்துள்ளார். இதேபோல் தன் அப்பாவிடம், தனக்கு செல்போனும் வாங்கிக் கேட்டுள்ளார். ஆனால், குடும்பப் பொருளாதாரம் ஒத்துழைக்காததால் கருப்பசாமி செல்போன் வாங்கித்தர மறுத்திருக்கிறார். பள்ளிக்கூடம் செல்ல பிடிக்காதது, செல்போன் வாங்கித்தராதது ஆகிய காரணங்களால் தான் சதீஸ் இறந்தாரா? அல்லது வேறுகாரணங்கள் இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in