பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி: எத்தனை பேர் சென்டம் தெரியுமா?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; வழக்கம் போல மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய மாணாக்கர்களில் 94.03% தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வினை 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய நிலையில் அவர்களில், 7,55,451 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,21,013 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4,05,753 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல 3,82,371 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,49,697 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழில் 2 மாணாக்கர்களும், ஆங்கிலத்தில் 15 பேரும், கணிதத்தில் 690 மாணாக்கர்களும், இயற்பியலில் 812 பேரும், உயிரியலில் 1,494 மாணாக்கர்களும் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு வேதியியல் பாடப்பிரிவில் 1,500 பேர் 100% மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 3,909 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணினி பாடத்தில் 4,051 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 2767 பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in. ஆகிய இணையத்தளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in