உதவி பண்ணுங்க... ஆனால்..! - ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர்கள் கோரிக்கை

உதவி பண்ணுங்க...  ஆனால்..! - ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர்கள் கோரிக்கை

இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவிடக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில், " நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில்,தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது, நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும். பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இந்த வேளையில் தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிரிவினையை ஏற்படுத்தும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும்" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in