தரையிறங்கும் போது மோதி விபத்திற்குள்ளான விமானம்: உடல் கருகி 3 பேர் பலி

தரையிறங்கும் போது மோதி விபத்திற்குள்ளான விமானம்: உடல் கருகி  3 பேர் பலி

ரஷ்யா சரக்கு விமானம் இன்று காலை தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் 3 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற சரக்கு விமானம் 9 பேருடன் ரஷியாவின் ரியாசான் நகருக்கு அருகே இன்று காலை தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 9 பேரில் 3 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in