வறுமையை பயன்படுத்தி பெண்களை வைத்து பாலியல் தொழில்: பெண் மீது பாய்ந்தது குண்டாஸ்!

வறுமையை பயன்படுத்தி பெண்களை வைத்து பாலியல் தொழில்: பெண் மீது பாய்ந்தது குண்டாஸ்!
கைது

ஏழ்மை நிலையை பயன்படுத்தி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை கோ.புதூா் மகாலட்சுமி நகரைச் சோந்த தேவராஜின் மனைவி பிரசன்னாதேவி. இவா் வறுமையில் சிக்கித்தவிக்கும் பெண்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவா்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இது குறித்த கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தி பிரசன்னாதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடம் இருந்த இளம்பெண்கள் சிலரையும் மீட்டனர். இவர் ஏழை பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிரசன்னாதேவியை குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறையினர் அவரை குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதற்கான ஆணை மதுரை மத்தியச் சிறையில் உள்ள பிரசன்னாதேவியிடம் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in