மாங்காய் ஊறுகாய் பாட்டிலில் கண்ணாடி துண்டு: சாப்பிடக் காத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி!

மாங்காய் ஊறுகாய் பாட்டிலில் கண்ணாடி துண்டு: சாப்பிடக் காத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி!

ஊறுகாய் பாட்டிலில் இருந்த கண்ணாடி துண்டை மெல்ல முயன்ற பெண்ணுக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சூப்பர் மார்க்கெட் ஒன்றில்  பிரபல தனியார் நிறுவனத்தின்  மாங்காய் ஊறுகாய் பாட்டிலை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் அவர் சாப்பிடும் போது அந்த மாங்காய் ஊறுகாயை எடுத்துக் கடித்துள்ளார்.

அப்போது அதிலிருந்த கண்ணாடி துண்டு ஒன்று அவரின் வாயில் சிக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கண்ணாடி துண்டை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவுப் பொருட்களில் ஆபத்தான பொருட்கள் இருக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in