உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல்: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு!

உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல்: சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு!

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 197 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 1,43, 49 ஆண்களும், 43,949 பேரும் பெண்களும், 43 திருநங்கைகள் உட்பட மொத்தம் 2,21,213 பேர் தேர்வு எழுதினர். குறிப்பாக சென்னையில் மட்டும் 7,080 ஆண்கள், 1,506 பெண்கள் என 8,586 பேர் எழுதினர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு அந்தந்த மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற்றது.

எஸ்ஐ தேர்வை நேரடியாக எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் உடற்திறன் தேர்வு நடைபெற்றது. சென்னை கோட்டத்தில் 650 பேருக்கு 1,500 மீட்டர் இலக்கை 7 நிமிடங்களில் அடைய வேண்டும் என்ற உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 267 பேருக்கு இன்று நீளம் - உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகளுடன் உடல்திறன் தேர்வு நடைபெற்றது வருகிறது.

இதிலும் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் எஸ்ஐ பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் பணி வழங்கப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in