வரலாறு காணாத விலை உயர்வு: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 233 ரூபாய்!

வரலாறு காணாத  விலை உயர்வு: பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 233 ரூபாய்!

இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.24 உயர்த்தப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு 233.89 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை இனி அரசு ஏற்கும் நிலையில் இல்லை என்று அறிவித்துள்ள பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.233.89க்கும், டீசல் ரூ.263.31க்கும், மண்ணெண்ணெய் ரூ.211.43க்கும், லைட் டீசல் ரூ.207.47க்கும் விற்பனை செய்யப்படும் என்று கூறினார். பெட்ரோல் மற்றும் டீசலின் இந்த விலை உயர்வானது வரலாறு காணாத அதிகபட்ச அளவாகும்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேண்டுமென்றே மானியம் அளித்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததாகவும், இந்த மானியங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது என்றும், அந்த முடிவுகளின் சுமையை தற்போதைய அரசாங்கம் சுமந்து வருவதாகவும் அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறினார். மேலும், பாகிஸ்தானில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.24.03, டீசலுக்கு ரூ.59.16, மண்ணெண்ணெய்க்கு ரூ.39.49, லைட் டீசல் ஆயிலுக்கு ரூ.39.16 அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in