ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் விலை: விறகு அடுப்புக்கு மாறிய ஏழை மக்கள்!

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் விலை: விறகு அடுப்புக்கு மாறிய ஏழை மக்கள்!

149-வது நாளாக ஒரே நிலையலில் பெட்ரோல், டீசல், காஸ் விலை இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும் குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் படும் இன்னல்களை அரசுகள் கண்டுகொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்து வரும் நிலையில், அங்கு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த 149 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதே நேரத்தில் சமையல் எரிவாயு விலையிலும் எந்தவித மாற்றம் இல்லை. ஒரு சமையல் எரிவாயு விலை 1068 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதன் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆயிரம் ரூபாய் கொடுத்து சமையல் எரிவாயு வாங்க முடியாததால் கிராமப்புறங்களில் மக்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டுள்ளது. இதன் விலைகளை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in