'16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்': போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போஸ்ட்கார்டு

'16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்': போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போஸ்ட்கார்டு

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில்," பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ குமரன் நகர் மற்றும் பிஎப்ஐ குமரன் நகர்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடித்தால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். பிஎஃப்ஐ உள்ளிட்ட அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ள சூழ்நிலையில் அந்த அமைப்பின் பெயரைக் கெடுக்க யாராவது இந்த மர்மக் கடிதத்தை அனுப்பியுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in