வணிக வளாகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சென்னையில் பொறியாளர் சிக்கினார்

வணிக வளாகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சென்னையில் பொறியாளர் சிக்கினார்

சென்னையில் வேலைகேட்டுக் கிடைக்காததால் இரண்டாவது முறையாக வணிக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் சிக்கியுள்ளார்.

சென்னை பரங்கிமலை ஜவஹர்லால் நேரு சாலையில் தாமரை டெக்னோ பார்க் என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. ஏழு மாடிகள் கொண்ட இவ்வளாகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் அசோக் மேட்ச்சஸ் - டிம்பர் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் மற்றும், பைனீர் ஆசிய கம்பெனி, டவ் கெமிக்கல் கம்பெனி உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1700-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இவ்வளாகத்தின் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்து காவலாளி அறை மீது பீர்பாட்டிலில் மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்து வீசி விட்டு தப்பிச்சென்றார். அப்போது பாட்டில் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. உடனே பணியில் இருந்த காவலாளி வீரமணி, ஜெயக்குமார், சேகர் ஆகியோர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து மண்ணெண்ணெய் குண்டு வீசி சென்ற நபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டை வணிக வாளகத்திலுள் வீசினார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி தியாகராஜன் ஓடிவந்து பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து வைத்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். பிடிபட்ட வாலிபரை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ஆந்திரார மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசு(32) என்பதும், பி.இ. மெக்கானிக்கல் படித்து முடித்து விட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பெங்களூர் கம்பெனியில் இருந்து விலகி 2019-ம் ஆண்டு தாமரை டெக் பார்க் வளாகத்தில் உள்ள டவ் கெமிக்கல் கம்பெனியில் பொறியாளராக வேலைக்கு அவர் சேர்ந்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு அந்த கம்பெனியில் இருந்து ராஜினாமா செய்த சீனிவாசு பின்னர் பல கம்பெனிக்கு வேலை கேட்டுச் சென்றுள்ளார். எங்கும் வேலை கிடைக்காததால் மனவிரகத்தியில் இருந்த வந்த சீனிவாசு, தனக்கு வேலைகிடைக்காததற்கு டவ் கம்பெனி தான் காரணம் என நினைத்து ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சீனிவாசு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in