குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வடமாநில கொள்ளையர்கள் வழக்கு: அதிரடி காட்டிய ஐகோர்ட்

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வடமாநில கொள்ளையர்கள் வழக்கு: அதிரடி காட்டிய ஐகோர்ட்

திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டதை ரத்து செய்யக்கோரி வடமாநில கொள்ளையர்கள்  தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.  இதுதொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா்  திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா்  உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்ட நபா்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை மகாராஷ்டிராவில் கைது செய்தனர். பின்னர் அவர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  விசாரணைக்காக தமிழ்நாடுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

 வட மாநில கொள்ளையர்களான மஹ்தாப் உள்ளிட்ட  4 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பாக ஆஜரான  மாநில கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ்," இவர்கள் மீதான  குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், இவர்கள் மீது போட்டிருக்கும் குண்டர் சட்டத்தை ரத்து செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும்" என்றும் வாதங்களை முன்வைத்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வட மாநில கொள்ளையர்களான 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in