இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக் கொள்ளலாம்!

மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசிHindu கோப்பு படம்

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. "கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மேலும் வலுப்படுத்தும்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9வது தடுப்பூசி. கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மேலும் வலுப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

கரோனா கிருமிக்கு எதிராக 65 சதவீகிதத்துக்கு மேல் பலன் தருவதாக ஸ்புட்னிக் லைட் பற்றிய ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றனர். ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தது. ஏனைய தரவுகள் சமர்பிக்கப்படாத நிலையில், மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு அனுமதி மறுத்து இருந்தது. இதையடுத்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான தரவுகள் அளிக்கப்பட்டதால் 3ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவசரகால பயன்பாட்டிற்கு ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை பயன்படுத்த மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதிஅளித்துள்ளது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷயாவைச் சேர்ந்த கமலயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கும் விநியோகித்து வருகிறது. இந்தியாவுடன் சேர்த்து இதுவரை 29 நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in