பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை; இன்ஸ்பெக்டர் நிரந்தர விடுவிப்பு: திண்டுக்கல் டிஐஜி அதிரடி

பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை; இன்ஸ்பெக்டர் நிரந்தர விடுவிப்பு: திண்டுக்கல் டிஐஜி அதிரடி

பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கீரனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வீரகாந்தி பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் அங்கு பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு வீரகாந்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த பெண் போலீஸ்காரர் திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரனிடம் புகாரளித்தார்.

பல்வேறு கட்ட விசாரணையில் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீரகாந்தியை அவரை பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் டிஐஜி அபிநவ் குமார் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டம் லத்தேரியில் குற்றவாளிகளை பிடிக்க தவறியதால் லத்தேரி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ 2 பேர் உள்பட 12 பேரை எஸ்பி ராஜேஷ் கண்ணன் நேற்று முன்தினம் பணியிடை மாற்றம் செய்து உத்தவிட்டார். இந்தநிலையில் திண்டுக்கல் சரக டிஐஜி-யின் அதிரடி நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்ட போலீஸார் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in