சென்னை பெரம்பூரில் கொள்ளை நடந்த நகைக்கடை
சென்னை பெரம்பூரில் கொள்ளை நடந்த நகைக்கடை பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் திருவண்ணாமலை கொள்ளையர்களுக்கு தொடர்பா..?

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை; திருவண்ணாமலை விரைந்த சென்னை போலீஸார்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பெரம்பூர் நகைக்கடைக் கொள்ளையுடன் தொடர்பு உள்ளதா, என்பதை அறிய திருவண்ணாமலைக்கு சென்னை போலீசார் விரைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூர் நகைக்கடையில் துளையிட்டு 9 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுத்தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொள்ளையடித்த பின்னர் தப்பிச்சென்ற இடங்கள் தொடர்பான விவரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு நகைக் கடை கொள்ளையுடன் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக சென்னை போலீஸார் திருவண்ணாமலை விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in