வெட்டப்பட்ட வேப்ப மரத்தடியில் தொடர்ந்து தங்கும் நாகப்பாம்பு: அம்மனே வந்ததாக ஆர்ப்பரிக்கும் மக்கள்!

வெட்டப்பட்ட வேப்ப மரத்தடியில் தொடர்ந்து தங்கும் நாகப்பாம்பு: அம்மனே வந்ததாக ஆர்ப்பரிக்கும் மக்கள்!

வந்தவாசி அருகே வேப்ப மரம் வெட்டப்பட்ட இடத்தில் நல்ல பாம்பு ஒற்று 15 நாட்களாகத் தொடர்ந்து தங்கி வருவதால் அம்மன் அவதாரமாக அந்த பாம்பை நினைத்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளது வல்லம் சித்தேரி கிராமம். இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் கூலித் தொழிலாளி ஒருவர் அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தை வெட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்றைக் கண்டு அவர் மிரண்டு ஓடியுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அங்குப் பாம்பு இல்லாததால், மீண்டும் அந்த வேப்ப மரத்தை அவர் வெட்டி அப்புறப்படுத்தினார்.

இந்நிலையில் மறுநாள் அந்த பகுதிக்கு வந்த சிலர் வேப்பமரம் வெட்டப்பட்ட இடத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். வேப்ப மரம் வெட்டப்பட்ட பிறகு அதே இடத்தில் பாம்பு சுற்றிச் சுற்றி வந்துள்ளதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிசயத்து வருகிறார்கள். மேலும் அம்மனே பாம்பு வடிவில் வந்து அருள்பாலிப்பதாக்க அந்த கிராமத்தில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். 15 நாட்களாகத் தொடர்ந்து அதே இடத்தில் பாம்பு இருப்பதால், அந்த இடத்தில் பாலூற்றியும், பூஜை செய்தும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவத் தொடங்கியதால், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் அப்பகுதிக்குப் படையெடுத்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in