சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம்: 50 பேரைக் கைதுசெய்த போலீஸார்

சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம்: 50 பேரைக் கைதுசெய்த போலீஸார்

சாலையைச் சீரமைத்து அகலப்படுத்த வலியுறுத்தி மீன்சுருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். 

‘அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியிருந்து கல்லாத்தூர் செல்லக்கூடிய 16 கிலோமீட்டர் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அத்துடன்  இருபுறமும் முள்மரங்கள் வளர்ந்து சாலை ஓரங்களில் மண்டிக் கிடப்பதால் சாலை குறுகியுள்ளது. இதையடுத்து சாலையைச் சீரமைத்து, அகலப்படுத்த வேண்டும். இதே போல் வெத்தியார்வெட்டு கிராமத்திலுள்ள சாலையையும் சீரமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

தங்கள் போராட்டங்களின் தொடர்ச்சியாக, சாலையைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி இன்று மீன்சுருட்டி கடைவீதியில் முற்போக்குச் சிந்தனையாளர் இயக்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in