இரவில் மகன்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்; பெற்றோர்களிடம் ஜி பே-யில் பணம் பறிப்பு: சிசிடிவியால் சிக்கிய கும்பல்

 பணம்
பணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பொறியாளர்களைத் தடுத்து நிறுத்தி ஜி பே வழியாகப் பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜிஸ்னு(26), சுர்ஜித்(22). இவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக உள்ளனர். அண்மையில் ஊருக்கு வந்த இவர்கள் மார்த்தாண்டம், படர்ந்தபாறை பகுதியில் உள்ள தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மார்த்தாண்டம் சந்தை பின்பகுதி வழியாக இரவு 11 மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்றுவந்தது. அந்தக் கும்பல் இவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி கையில் இருந்த பணத்தையெல்லாம் பறித்தது. தொடர்ந்து அந்த இருவரின் பெற்றோருக்கும் அழைத்து ஜி பே வழியாகவும் பணம் பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களது செல்போனையும் மர்மக்கும்பல் பறித்துச் சென்றுவிட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப்பதிந்து, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெனால்ட்(27), அவரது நண்பர்கள் ஆளுவிளை அஜின் மோன்ஸே(23), சிபின் இம்மானுவேல்(22), அஸ்வின்(19) ஆகியோர்தான் இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நான்குபேரையும் கைதுசெய்த போலீஸார், தப்பியோடிய மேலும் ஒருவரையும் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in