தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் என்று ட்விட் செய்து உள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து இதைப் பரப்பியவர்கள் மீது வழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதேபோல் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில் அதற்காக சொந்த ஊர் நோக்கி செல்வோரைப் படம் பிடித்து, சிலர் அச்ச உணர்வோடு தமிழகத்தைவிட்டு வட இந்தியர்கள் வெளியேறுவதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவாகரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அது போலியானது. வதந்தி என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பீதியடைந்து, பதற்றத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்பானவர்கள். அதேபோல் இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் உள்ளது ”என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in