பென்சிலின் தோல் தொண்டையில் சிக்கியது - 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாபம்

பென்சிலின் தோல் தொண்டையில் சிக்கியது - 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாபம்

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பென்சில் தோல் தொண்டைக்குள் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆறு வயது சிறுமி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்ததுள்ளது.

ஹமிர்பூரை சேர்ந்த ஆர்த்திகா என்ற 1-ம் வகுப்பு மாணவி, புதன்கிழமை மாலை வீட்டின் மொட்டை மாடியில் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் சகோதரி அன்ஷிகாவுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். வீட்டுப்பாடம் செய்வதற்கு முன், வாயால் ஷார்ப்பனரைப் பிடித்துக்கொண்டு பென்சிலை சீவிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு பென்சில் தோல் சிறுமியின் தொண்டைக்குள் சிக்கியது. இதனால் மூச்சு விட முடியாமல், அந்த சிறுமி மூச்சுத் திணறி தரையில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சோக சம்பவம் காரணமாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in