மேற்கு தொடர்ச்சி மலையில் வேட்டையாடப்பட்ட மயில்கள்: வனப்பகுதியில் 2 பேர் சிக்கினர்

கைதான சரவணக்குமார், முத்துக்குமார்
கைதான சரவணக்குமார், முத்துக்குமார் மேற்கு தொடர்ச்சி மலையில் வேட்டையாடப்பட்ட மயில்கள்: வனப்பகுதியில் 2 பேர் சிக்கினர்

திருவில்லிபுத்தூர் அருகே மயில்களை வேட்டையாடிய இருவர் வனத்துறையினரிடம் சிக்கினர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இங்கு அரிய வகை சாம்பல் நிற அணில், மிளா, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இந்தநிலையில், திருவில்லிபுத்தூர் அருகே பந்தப்பாறை வனப்பகுதியில் திரியும் மயில்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு சாக்கு பையுடன் நின்ற இருவரை பிடித்தனர். விசாரணையில், மம்சாபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (30), முத்துக்குமார் (28) ஆகியோர் எனவும், மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.

சாக்குப்பையில் அவர்கள் வைத்திருந்த 3 மயில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். வேறு யாரேனும் மயில்கள் வேட்டையில் ஈடுபட்டுள்ளனரா எனவும் தொடர் ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in