அடகு நகையைத் திருப்பி நூதன மோசடி: சப் இன்ஸ்பெக்டரை கைதுசெய்து 70 பவுன் பறிமுதல்

அடகு நகையைத் திருப்பி நூதன மோசடி
அடகு நகையைத் திருப்பி நூதன மோசடிஅடகு நகையைத் திருப்பி நூதன மோசடி: சப் இன்ஸ்பெக்டரை கைதுசெ ய்து 70 பவுன் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் அடகுநகைகளைத் திருப்பி வைத்துக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் தன் தம்பியுடன் சேர்ந்து நூதன மோசடி செய்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்(42). இவர் சொந்தத் தொழிலில் செய்து வருகிறார். இவர் தன் தொழில் வளர்ச்சிக்காக தனது 246 பவுன் நகைகளை பாளையங்கோட்டையில் உள்ள வங்கி ஒன்றில் அடகுவைத்து இருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா காலக்கட்டத்தில் தொழில் சரியாகப் போகவில்லை. இதனால் உரிய காலத்தில் அடகு வைத்த நகையைத் திருப்ப முடியாமலும் போனது.

அப்போது அவரது நண்பர் பாளையங்கோட்டை பாலித்தீன் நகர் பகுதியைச் சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் நகைகளைத் திருப்ப பணஉதவி கேட்டார். மேலும் உரிய நேரத்தில் திருப்பவில்லையென்றால் நகைகள் அடகுக்குப் போய்விடும் எனவும் வேண்டினார். அப்போது கோமதிநாயகம் நகைகளைத் திருப்பியதோடு, அதற்குரிய பணத்தை கொடுத்த உடன் நகைகளைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். ஆனால் சொன்னது போல் ரமேஷ்குமார் பணத்தைக் கொடுத்ததும், அடகில் மீட்ட நகைகளைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுகுறித்து ரமேஷ்குமாரை, கோமதிநாயகம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது சகோதரர் கண்ணையா மூலம் கொடுக்கும் பணத்தை வாங்கிச் செல்லும்மாறும், நகையைக் கேட்கக் கூடாது எனவும் மிரட்டினார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் ரமேஷ்குமார் புகார் கொடுத்தார். அவர் இதுகுறித்து விசாரித்த போது புகார் உண்மை எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெல்டர் கண்ணையா, அவரது சகோதரர் கோமதிநாயகம் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 70 பவுன் நகைகளையும் மீட்டனர். சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in