
பஞ்சாப் பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஷாகித் லத்தீப் என்பவர், பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் குழுவினர் திடீர் தாக்குதலை தொடுத்தனர். இதில் இந்தியாவின் ஏழு இந்திய விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாகித் லத்தீப், பதன்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என பின்னர் தெரிய வந்தது. இந்த ஷாகித் லத்தீப் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தாஸ்கா நகர் மசூதியில், அடையாளம் அறியப்படாத 3 நபர்களால் இன்று (அக்.11) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஷாகித் லத்தீப் கூட்டாளிகள் இருவரும் உடன் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1993-ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவிய ஷாகித் லத்தீப் என்னும் பிலால், பின்னர் ஜம்மு காஷ்மீர் போலீஸார் பிடியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். ஜம்மு சிறையில் 2010 வரை அடைபட்டிருந்த காலத்தில், சக சிறைவாசியான ஜெய்ஷ் இ முகமது நிறுவனர் மசூத் அசாருடன் நெருக்கமானார். 2010-ம் ஆண்டு விடுதலையானபோது பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்தபடி தனது பயங்கரவாத செயல்பாடுகளை தீவிரமாக்கிய ஷாகித் லத்தீப், பதன்கோட் தாக்குதலுக்கு திட்டமிட்டார்.
பதன்கோட் தாக்குதல் வழக்கில் இந்தியாவின் என்ஐஏவால் தேடப்பட்டு வரும் ஷாகித் லத்தீப்பின் இழப்பு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு பலத்த அடியாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர், இந்தியாவுக்கு வெளியில் அடுத்தடுத்து கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கனடாவின் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரில் தொடங்கி தற்போதைய பாகிஸ்தான் ஷாகித் லத்தீப் வரை இந்த பதிலடிகளின் பின்னணியில், இந்தியாவின் ‘ரா’ உளவு ஏஜெண்டுகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!