தைப்பூசத் திருவிழா: பழநி மலைக்கோயில் செல்லும் பாதையில் திடீர் மாற்றம்

கும்பாபிஷேகத்தின்போது பருந்து பார்வையில் பழநி மலைக்கோயில்
கும்பாபிஷேகத்தின்போது பருந்து பார்வையில் பழநி மலைக்கோயில் தைப்பூசத் திருவிழா: பழநி மலைக்கோயில் செல்லும் பாதையில் திடீர் மாற்றம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை இன்று முதல் பிப்.5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி தைப்பூசத் திருவிழா ஜன.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.5-ல் பூசத்திருவிழா நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாகச் சென்று பழநி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நகரத்தார், நாட்டார்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக இன்று பழநி வந்து மண்டகப்படிகளில் தங்கி வருகின்றனர்.

பழநி கோயிலுக்குத் தினமும் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மலைக்கோயில் செல்லும் பாதை இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம்," பழநி தண்டாயுதபாணி கோயில் நடப்பாண்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி, இன்று (பிப்.3) முதல் பிப்.5-ம் தேதி வரை மலைக்கோயிலுக்கு கும்பாபிஷேக அரங்கம் வழியாக யானை பாதையை இணைத்து ஒரு வழியாகவும், மலைக்கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக கீழே இறங்க ஒரு வழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in