விடுதியில் தங்கியிருந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை: மதபோதகர் போக்சோவில் கைது

விடுதியில் தங்கியிருந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை: மதபோதகர் போக்சோவில் கைது

விடுதியில் தங்கிப் படித்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை கைது செய்த போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள கூனம்பட்டியில் ஏழை எளிய மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் திருப்பூருக்கு அருகே இருந்து தங்கிப் படித்த மாணவி ஒருவர், வீட்டிற்குச் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பினார். விடுதிக்கு திரும்பிய 14 வயது சிறுமியை மீண்டும் விடுதியில் சேர்க்க நிர்வாகத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தன.

விடுதியுடன் கூடிய மதபோதனை கூடத்தில் மதபோதகரான  ஆண்ட்ரூஸ்  என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பவம் குறித்து ஊத்துகுளி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஊத்துகுளி காவல் ஆய்வாளர் கவிதா போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்ட்ரூசை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in