கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மதமாற்றம்: பாதிரியாரை கைது செய்தது போலீஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மதமாற்றம்: பாதிரியாரை கைது செய்தது போலீஸ்

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது மக்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் பவுலஸ் மாசிஹ் என்பவரை உத்தரபிரதேச மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், பட்டியலினத்தை சேர்ந்த சிலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றத் தூண்டியதாக ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பட்வாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோஹ்னா கிராமத்தில் உள்ள மக்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பவுலஸ் மாசிஹ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் - 2021ன் பிரிவு 3 மற்றும் 5(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சன்சார் சிங், “அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் யாதவ் அளித்த புகாரின் பேரில் பட்வாய் காவல் அதிகாரி ஹரேந்திர யாதவ் பாதிரியாரை கைது செய்தார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in