சென்னையில் 7 நாட்களில் 11.3 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னையில் 7 நாட்களில் 11.3 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னையில் கடந்த 7 நாட்களில் 3.4 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெடமைன், 8 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்கும் விதமாக ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி பகுதியில் மெத்தம்பெடமைன் போதை பொருள் வைத்திருந்த 4 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 கிராம் மெத்தம்பெடமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை மாம்பலம் பகுதி கஞ்சா சாக்லெட் விற்பனை செய்து வந்த வட மாநிலத்தவரை தி.நகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வண்ணாரப்பேடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இத்தனை சோதனைகளை கடந்தும் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதும், கடந்த 7 நாட்களில் சென்னையில் 11.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in