ஓலா கார் டிரைவர் ஓங்கி அடித்ததில் பயணி உயிரிழப்பு: சென்னையில் பயங்கரம்!

உயிரிழந்த உமேந்தர் குடும்பத்தாருடன்.
உயிரிழந்த உமேந்தர் குடும்பத்தாருடன்.

சென்னையில் ஓலா கார் டிரைவர் தாக்கியதில் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்து கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் உமேந்தர்(34). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாடக்ளுக்கு முன்பு உமேந்தர் விடுமுறையில் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு உமேந்தர் கேளம்பாக்கம் அருகே உள்ள மெரினா மாலில் தனது உறவினர்களுடன் படம் பார்த்துவிட்டு மீண்டும் கூடுவாஞ்சேரி செல்வதற்காக ஓலா கார் புக்கிங் செய்துள்ளார். அப்போது காரில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்பாக ஓலா கார் ஓட்டுநரான ஆத்தூரைச் சேர்ந்த ரவி(41) என்பவருக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ஓலா கார் ஓட்டுநர் ரவி,தனது செல்போனால் உமேந்தரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் நெற்றி பொட்டில் பட்டு உமேந்தர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த கேளம்பாக்கம் போலீஸார், உமேந்தர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஓலா கார் ஓட்டுநர் தாக்கியதில் உமேந்தர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார், ஓலா கார் ஓட்டுநர் ரவி மீது கொலை மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓலா ஓட்டுநர் தாக்கி பயணி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in