அதிர்ச்சி... பயணிக்கு திடீர் மாரடைப்பு: பேருந்திலேயே உயிர் பிரிந்தது!

பேருந்தில் மாரடைப்பால் மயங்கிய பயணி
பேருந்தில் மாரடைப்பால் மயங்கிய பயணி

பெங்களூருவில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு
பெங்களூரு

கர்நாடகா மாநிலம், பெங்களூரு மெஜஸ்டிக் ஸ்டேஷனில் நின்ற பயணி ஒருவர், நேற்று இரவு 11 மணியளவில் பிஎம்டிசி பேருந்தில் ஏறியுள்ளார். நடத்துநரிடம் டிக்கெட் பெற்ற அந்த பயணி பேருந்தில் அமர்ந்திருந்தார். நவரங் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது அந்த பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துநர் பயணியை சோதனை செய்த போது அவர், நினைவின்றி இருப்பது தெரிய வநதது.

இதனால் உடனடியாக அந்த பேருந்திலேயே தனியார் மருத்துவமனைக்கு பயணியைக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த பயணி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர், பசவேஷ் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார், அந்த பயணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பேருந்தில் மாரடைப்பால் உயிரிழந்தவர் கிருஷ்ணா(60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு போலீஸார் உடனடியாக தகவல் தெரிவித்தனர். ஓடும் பேருந்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in