நிலச்சரிவால் இடிந்து விழும் மலை: வெளியான அதிர்ச்சி வீடியோ!

நிலச்சரிவால் இடிந்து விழும் மலை: வெளியான அதிர்ச்சி வீடியோ!

உத்தராகண்டில் பெய்த கனமழை காரணமாக மலையின் பெரும் பகுதி இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக உள்ளூர் மக்களுடன் சேர்த்து 40 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களும் தவாகாட் அருகே சிக்கித் தவித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலச்சரிவு காரணமாக ஆதி கைலாஷ் யாத்திரை தடைபட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25 ம் தேதி வரை மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல நெடுஞ்சாலைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகள் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளன.

அதேபோல ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை உத்தரகாசியில் ஹெல்குகாட் மற்றும் ஸ்வரிகாட் அருகே மலைகளில் இருந்து விழுந்த பாறைகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-கல்சி-பர்கோட் தேசிய நெடுஞ்சாலையும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் (SEOC) தெரிவித்துள்ளது.

டேராடூனில் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபானி சோய்லா, சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in