தென்னந்தோப்பில் இளம்பெண் எரித்துக் கொலை?: பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலால் போலீஸார் அதிர்ச்சி

பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம் பெண்ணின் உடல்
பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம் பெண்ணின் உடல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாதி எரிந்த நிலையில், கிடந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக கிராம மக்கள் காவல்துறையினருக்கு இன்று தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறையினர், எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் பொன்னி, நிகழ்விடத்தில் இருந்து அருகே இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்று நின்றது.

மேலும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in