பகுதியளவு சூரிய கிரகணம்: செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

பகுதியளவு சூரிய கிரகணம்: செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

இன்று நிகழவிருக்கும் பகுதியளவு சூரிய கிரகணத்தை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்க்க முடியும். சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு பகுதியளவு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணம் போல இது முழுமையான கிரகணமாக இருக்காது. சூரியனின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கரு நிற நிழல் தெரியும். தொடக்கம், உச்சபட்ச நிலை, முடிவு என மூன்று நிலைகள் இந்த கிரகணத்தில் உண்டு.

இந்த ஆண்டின் ஏப்ரல் 30-ல் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இன்று நிகழவிருப்பது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். 2031 மே 21-ம் தேதி நிகழவிருக்கும் அடுத்த சூரிய கிரகணத்தை இந்தியாவிலிருந்து குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து பார்க்க முடியும். 2034 மார்ச் 20-ல் நிகழ்விருக்கும் சூரிய கிரகணத்தை காஷ்மீரின் வடக்குப் பகுதியிலிருந்து காண முடியும்.

இந்திய நேரப்படி மாலை மாலை 4.20 மணி தொடங்கி வெவ்வேறு நேரங்களில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும். டெல்லியில் மாலை 4.29 மணிக்குத் தொடங்கி, 6.09 மணி வரை இந்த நிகழ்வைப் பார்க்கலாம். இதன் உச்சபட்ச நிலையை மாலை 5.42 மணிக்குப் பார்க்க முடியும். மும்பையில் மாலை 4.49 மணிக்குத் தொடங்கி 5.42 மணி வரை இதைப் பார்க்க முடியும். பெங்களூருவில் மாலை 5.12 மணி முதல் 5.55 மணி வரை இந்நிகழ்வைக் காணலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை

இன்று நிகழ்விருக்கும் கிரகணம் வெறும் கண்ணுக்குப் புலப்படும். எனினும், சூரியக் கதிர்கள் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதற்கான பிரத்யேகக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு கிரகணத்தைப் பார்ப்பதே பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி வெங்கடேஷ்வரா கோயில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் சூரிய கிரகணம் முடிந்த பின்னர் நடை திறக்கப்படும். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பல கோயில்கள் இன்று மூடப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் பல கோயில்கள் நடை சாத்தப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து மாலை 5.12 மணிக்கு இந்நிகழ்வைப் பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in