வைரலாகும் வீடியோ... சந்திரயான் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பரோட்டா மாஸ்டர்!

வைரலாகும் வீடியோ... சந்திரயான் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பரோட்டா மாஸ்டர்!

சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் இஸ்ரோ மற்றும் ராக்கெட் வடிவத்தில் பரோட்டா போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்கலன் நிலவில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திரத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்த சரித்திர சாதனை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ‘’ISRO 3'' மற்றும் ராக்கெட் வடிவத்தில் பரோட்டோ போட்டு அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in