பலத்த காற்று வீசுவதால் கடற்கரைக்குச் செல்ல தடை: மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் பூங்காக்களும் மூடல்

பலத்த காற்று வீசுவதால் கடற்கரைக்குச் செல்ல தடை: மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் பூங்காக்களும் மூடல்

'மேன்டூஸ்' புயல் காரணமாகச் சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அத்துடன் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர் போன்ற கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு வலுசேர்க்கும் விதமாக 'மேன்டூஸ்' புயல் தீவிரமடைந்துள்ளதால் அலர்ட் மோடில் தமிழகம் தயார் நிலையிலிருந்து வருகிறது. மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவொற்றியூர் போன்ற கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மரங்கள், ஆபத்தான கட்டிடங்கள் போன்ற இடங்களில் மக்கள் தஞ்சமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 'மேன்டூஸ்' புயல் காரணமாகச் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டுத் திடல்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாகச் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில்,  “ 'மேன்டூஸ்' புயல் காரணமாகச் சென்னையில் பலத்த காற்று வீசும் என்பதால், மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களுக்குப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் அனைத்துப் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை  மூடப்படும்” என  ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in