மகளை கொன்று தண்டவாளத்தில் வீசிச் சென்ற பெற்றோர்: பதறவைக்கும் சம்பவம்

மகளை கொன்று தண்டவாளத்தில் வீசிச் சென்ற பெற்றோர்: பதறவைக்கும் சம்பவம்

படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் 4 வயது மகளை பெற்றோரே கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் ஜார்க்கண்ட்டில் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிப்பம் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் உத்தம் மேடி- அஞ்சனா தம்பதி. கூலி வேலை செய்யும் இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் இருந்தார். 2-வது மகளான அவர், சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், மகளின் கைகளை கட்டி அடித்துள்ளனர். இதனால் மயங்கி விழுந்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, மகளின் உடலை 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்துச் சென்ற பெற்றோர், அங்கிருந்த தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

உடனே வீட்டிற்கு சென்றால் சந்தேகம் ஏற்படும் என்று நினைத்த பெற்றோர் ஒரு வாரத்துக்கு பிறகு இன்று ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களிடம் சிறுமியின் உடல் நிலை குறித்து ஊர்க்காரர்கள் கேட்டுள்ளனர். பெற்றோர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளை கொன்றதை பெற்றோர் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளை பெற்றோா் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in