`பெற்றோரின் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை'- வேதனையில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி

`பெற்றோரின் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை'- வேதனையில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தன் பெற்றோர் தவிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் உள்ள ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(53). கூலி தொழிலாளியான இவருக்கு இரு மகன்கள். மகள் பாப்பா நெல்லை அருகே தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி சுயநிதிப் பிரிவில் சேர்ந்துள்ளார். இதற்கு 12 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டியுள்ளனர். பாப்பாவின் பெற்றோர் இதற்கு மிகவும் சிரமப்பட்டு இரு தவணைகளாகவே கட்டியுள்ளனர். தன் கல்விக்கு பணம் கட்ட பெற்றோர் மிகுந்த சிரமம் அடைவதை பாப்பாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில தினங்களாகவே வேதனையிலேயே இருந்துள்ளார்.

நேற்று மாலை முத்துக்குமாரும், அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம், பாப்பா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி பாப்பா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், “பெற்றோருக்கு கல்விச் செலவு ஏற்படுத்திவிட்ட வேதனையில் தற்கொலை செய்கிறேன்” எழுதியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in