கண்டெய்னருக்குள் புகுந்த கார்; அம்மா, அப்பா, மகன் உயிரிழப்பு: பதைபதைக்கும் வீடியோ காட்சி

கண்டெய்னருக்குள் புகுந்த கார்; அம்மா, அப்பா, மகன் உயிரிழப்பு: பதைபதைக்கும் வீடியோ காட்சி

சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கவர்ந்த விபத்தில் தாய், தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலம், பக்வாரா- சண்டிகார் தேசிய நெடுஞ்சாலையில் களிமண் ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் இருபுறமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கண்டெய்னர் லாரி திடீரென வலது பக்கமாக வேகமாக திரும்பியது. அப்போது, கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று கண்டெய்னர் லாரிக்குள் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் தந்தை, தாய், மகன் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in