பள்ளிக்குச் செல்லாததைக் கண்டித்த பெற்றோர்: பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலைபள்ளிக்குச் செல்லாததைக் கண்டித்த பெற்றோர்: பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளிக்குச் செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனவருத்தத்தில் இருந்த பிளஸ் 2 மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள கரட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சத்யா(17) . இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார்.

சத்யாவின் தோழிகள் அரசுப்பள்ளியில் படித்து வந்தனர். அந்த பள்ளியில் தானும் பயில வேண்டும் என சத்யாவும் அடம்பிடித்தார். ஆனால் அவரது வீட்டில் தனியார் பள்ளியில் தான் பயில வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் வருத்தத்தில் நேற்று சனிக்கிழமை வகுப்புக்கு சத்யா செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து சத்யாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் வருத்தத்தில் இருந்த சத்யா இன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்குச் செல்லாததைப் பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in