படிக்கிறபோது நடந்த நிச்சயதார்த்தம்; காதலனுடன் சென்ற ஒரே மகள்: அவமானத்தால் உயிரை மாய்த்த பெற்றோர்

படிக்கிறபோது நடந்த நிச்சயதார்த்தம்; காதலனுடன் சென்ற ஒரே மகள்: அவமானத்தால் உயிரை மாய்த்த பெற்றோர்

ஆசையாய் வளர்த்த அன்பு மகள் தங்களை விட்டு காதலனுடன் சென்றதால் விஷம் அருந்தி  பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட பெற்றோரால் சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமதி
சுமதி

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி (65)- சுமதி (40) தம்பதியினர். இவர்களது மகள் புஷ்பரோகினி (19) அருகிலுள்ள சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். கல்லூரி படிப்பை மகள் முடிக்க உள்ள நிலையில் மகளுக்கு வரன் பார்த்து திருமணம் நிச்சயம் செய்தார்கள் பெற்றோர். 

ஆனால் புஷ்பரோகினி, தனது ஊரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் பெற்றோர் நிச்சயத்த  திருமணத்தை விரும்பாத புஷ்பரோகினி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனால் தனது மகள் அவரது  காதலனுடன் சென்று விட்டதாக கருதிய பெற்றோர்,  அவமானம் தாங்காமல் பயிர்களுக்கு  அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி வந்து வயல் பகுதிக்கு சென்று இருவரும் அருந்தினர். இதனால் மயங்கிய இருவரும் சிறிது நேரத்தில் வயலிலேயே துடி துடித்து இறந்தனர். 

நேற்று காலைவரை தனது பெற்றோரை காணவில்லை என்பதை அறிந்த அவர்களது  மகன் சந்திரசேகரன் வயல் பகுதிக்கு தேடிச்சென்றபோது இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் உதவியோடு அவர்களை வீட்டுக்கு தூக்கி வந்திருக்கிறார்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த புவனகிரி போலீஸார் இருவரின் சடங்குகளையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் மகள் சென்றதாக கருதி,  அதை தாங்க இயலாத பெற்றோர் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in