மகளுடன் விஷம் அருந்தி பெற்றோர் தற்கொலை - சிவகிரி அருகே சோகம்

இறந்து கிடக்கும் தாய் மகள்
இறந்து கிடக்கும் தாய் மகள்

சிவகிரி அருகே கல்லூரியில் படித்து வரும் மகளுடன் விஷம் அருந்தி பெற்றோர்களும் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சிவகிரி அருகே தேவிபட்டணம் நாயுடு தெருவை சேர்ந்தவர் ராமர்நாயுடு  மகன் ரமணன்(48) விவசாய தொழில் செய்து வரும் இவருக்கு கமலா வயது( 45) என்ற மனைவியும் ராஜ்குமார் (20), என்ற மகனும், நாகஜோதி  (18) என்ற மகளும் உள்ளனர்.  நாகஜோதிநெல்லையில் உள்ள அரசு கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் ராஜ்குமார் (20) ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்' 

இந்த நிலையில் நேற்று  ரமணனுக்கு சொந்தமான வயல்காட்டில் ரமணன் மற்றும் அவருடைய மனைவி கமலா, மகள் நாகஜோதி ஆகியோர் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தனர். தகவல் அறிந்து வந்த சிவகிரி காவல் நிலைய போலீஸார் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன்  ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் சிவகிரி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கமலா மற்றும் அவருடைய மகள் நாகஜோதி இறந்ததை உறுதி செய்தனர்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமணன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து  பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம்  குடித்து இறந்திருப்பது இப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் இவர்கள் தற்கொலைக்கு மகளின் காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in