பிரியாவின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்; கதறி அழுத சக மாணவிகள்: நீதிக்காக போராடும் உறவுகள்

பிரியாவின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்; கதறி அழுத சக மாணவிகள்: நீதிக்காக போராடும் உறவுகள்

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இதனிடைய, பிரியாவின் உடலை பார்த்து அவருடன் படித்த மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவி பிரியா அரசு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் இன்று அதிகாலை உயிரிழந்தார். தகவல் அறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு, 10 லட்சம் நிதியுதவியை அறிவித்தார். இதனிடையே, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால், உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறை துணை ஆணையர் ராபர்ட் ஜான், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தவறு செய்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகளின் உடலை வாங்க அவர்கள் சம்மதித்தனர். இதனிடையே, பிரியாவுடன் படித்த சகா மாணவிகள் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுத மாணவிகள், பிரியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை துணை ஆணைய ஆல்பர்ட் ஜான், மாணவி பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றும் கூறினார்.

போராட்டம் நீடித்து வந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் கவனக்குறைவாக ஏற்பட்ட துயரமான சம்பவம் இது என்றும் வீராங்கனை இழப்பை அரசியலாக்க கூடாது என்றும் துயர சம்பவத்தை மேலும் தூண்டிவிட்டு அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் குடும்பத்தினர் வீராங்கனையின் உடலை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் வீராங்கனை பிரியா விவகாரத்தில் சட்டப்படியும் விதியின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, மாணவி பிரியாவின் உடலை வாங்க ஒரு பிரிவினர் மறுத்து வருகின்றனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in