'ஆசைக்கு இணங்காவிட்டால் யாருடனும் வாழ முடியாது’… ஆபாச படங்களைக் காட்டி மிரட்டிய அண்ணன்: இளம்பெண் கடிதத்தால் பெற்றோர் அதிர்ச்சி

'ஆசைக்கு இணங்காவிட்டால் யாருடனும் வாழ முடியாது’… ஆபாச படங்களைக் காட்டி மிரட்டிய அண்ணன்: இளம்பெண் கடிதத்தால் பெற்றோர் அதிர்ச்சி

ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிய அண்ணன் முறை நபருடன் சென்று அந்த புகைப்படங்களை அழித்து விட்டுத் திரும்பி வருகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்ற இளம்பெண்ணால் அவரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் நாகராஜ்-பேபி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல மூவரும் வீட்டில் தூங்கச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் நாகராஜ் எழுந்து பார்த்தபோது அவரது 21 வயது மகளைக் காணவில்லை. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். பல மணி நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராத நிலையில், படுக்கை அறையில் கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “அஞ்சுகம் நகர்ப் பகுதியில் இருக்கும் தனக்கு அண்ணன் உறவு முறையில் உள்ள முருகன்(23) என்பவர் என்னுடைய புகைப்படங்களை ஆபாசமாகவும், இருவரும் சேர்ந்து இருப்பது போலவும் சித்தரித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி வருகிறார். தன்னுடன் வாழவில்லையென்றால் யாருடனும் வாழவிட மாட்டேன். ஆசைக்கு இணங்க மறுத்தால் ஆபாச புகைப்படங்களை சமூக வலை்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிக் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து முருகன் தொந்தரவு செய்து வருகிறார். ஆனால் முருகன் சொல்வது போல அவருடன் செல்ல எனக்கு விருப்பமில்லை. அவருடன் சென்று செல்போனில் உள்ள ஆபாச புகைப்படங்களை அழித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவேன்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தோடு சென்ற அவர்கள், பெருங்களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காணாமல் போன அவர்களின் மகளையும், தலைமறைவாக உள்ள முருகனையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in